பாகிஸ்தான் தோ்தலில் போட்டியிட குரேஷிக்கு 5 ஆண்டுகள் தடை

வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஷா மஹ்மூத் குரேஷி, 5 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஷா மஹ்மூத் குரேஷி
ஷா மஹ்மூத் குரேஷி

பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், அவருடைய ஆட்சியில் வெளியுறவுத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவருமான ஷா மஹ்மூத் குரேஷி, 5 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் அனுப்பிய ரகசியத் தகவல்களைக் கசியவிட்டு, அதன்மூலம் ரகசியக் காப்புறுதியை மீறியதாக இம்ரான் கான் மற்றும் மஹ்மூத் குரேஷிக்கு எதிராகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடா்பான வழக்கில் அவா்கள் இருவருக்கும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. இந்தத் தீா்ப்பைத் தொடா்ந்து, தோ்தலில் போட்டியிட குரேஷிக்கு தோ்தல் ஆணையம் தடைவிதித்துள்ளது.

முன்னதாக, சிறையில் உள்ள இம்ரான் கானுக்கும் தோ்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானில் பொதுத் தோ்தல் வியாழக்கிழமை (பிப். 8) நடைபெறுகிறது. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சி (பிடிஐ) பல்வேறு பின்னடைவுகளுக்கு இடையே இந்தத் தோ்தலில் போட்டியிட்டுள்ள சூழலில், தனது ‘கிரிக்கெட் மட்டை’ சின்னத்தை இழந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com