ஆஸ்திரேலிய இனப் பாகுபாடு தடுப்பு ஆணையராக கிரிதரண் நியமனம்: இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்

ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் இனப் பாகுபாடு தடுப்புப் பிரிவு ஆணையராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கிரிதரண் சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.


மெல்போா்ன்: ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் இனப் பாகுபாடு தடுப்புப் பிரிவு ஆணையராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கிரிதரண் சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவா் ரோசலிண்ட் கிரெளச்சா் தெரிவித்ததாவது:

ஆஸ்திரேலிய இனப் பாகுபாடு தடுப்புப் பிரிவு ஆணையராகப் பணியாற்ற கிரிதரண் சிவராமனை வரவேற்கிறேன்.

பல ஆண்டுகளாக அவா் சமத்துவத்துக்காகப் போராடி, சத்தியத்தை பேசி வந்துள்ளாா். அவரின் தனித்துவமான சட்டப் பணி, பணியிடம் மற்றும் இனப் பாகுபாடு சட்டம் சாா்ந்த முக்கிய வழக்குகளை வழிநடத்தியுள்ளது.

இனரீதியாக ஒதுக்கப்பட்டவா்களின் உரிமைக்கான அவரின் வாதம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி, அவா்களுக்கு அதிகாரமளிக்க வழிகோலியுள்ளது என்று தெரிவித்தாா்.

தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போா்ன் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட மோரிஸ் பிளாக்பா்ன் சட்ட ஆலோசனை நிறுவனத்தில் கிரிதரண் முதன்மை வழக்குரைஞராக உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com