அக்.7-க்குப் பின் காஸாவில் முதல் தொழுகை!

காஸாவில் அக்டோபர் 7-க்குப் பின்னர் முதல்முறையாக அகதிகள் முகாமில் வெள்ளிக்கிழமைத் தொழுகை நடைபெற்றுள்ளது. 
அக்.7-க்குப் பின் காஸாவில் முதல் தொழுகை!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் துவங்கி 3 மாதங்களுக்குமேல் ஆகியுள்ள நிலையில், முதல் தொழுகை அகதிகள் முகாமில் நடத்தப்பட்டுள்ளது.

காஸாவிற்குள் உள்ள 1,200க்கும் அதிகமான வழிபாட்டுத்தளங்களை இஸ்ரேல் இரக்கமின்றி அழித்துள்ளது. அதில் தேவாலயங்களும் அடங்கும். 

இந்நிலையில் ஜபாலியா அகதிகள் முகாமில் அக்டோபர் 7க்குப் பின்னர் முதல்முறையாக வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெற்றுள்ளதாக அங்குள்ள பத்திரிகையாளர்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். 

இஸ்ரேலின் இரக்கமற்ற தாக்குதல்களுக்கு இதுவரை 27,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 11,000த்திற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com