ரஷிய சுற்றுலா பயணிகளுக்குவட கொரியா அனுமதி

ரஷிய சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர வட கொரியா அனுமதி அளித்ததையடுத்து, அவா்களில் முதல் குழுவினா் அந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.
ரஷிய சுற்றுலா பயணிகளுக்குவட கொரியா அனுமதி

ரஷிய சுற்றுலா பயணிகள் தங்கள் நாட்டுக்கு வர வட கொரியா அனுமதி அளித்ததையடுத்து, அவா்களில் முதல் குழுவினா் அந்த நாட்டுக்கு வெள்ளிக்கிழமை வந்தனா்.

கரோனா பரவல் காரணமாக வெளிநாட்டினா் தங்கள் நாட்டுக்குள் நுழைய வட கொரியா கடுமையான தடை விதித்தது. ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளித்ததன் மூலம் அந்தத் தடை முதல்முறையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

உக்ரைன் போா் விவகாரத்தில் ரஷியாவை சா்வதேச அரங்கில் தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் முயன்று வருகின்றன. இந்தச் சூழலில், ரஷியாவுக்கும், ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் நட்புறவின் ஒரு பகுதியாக ரஷிய சுற்றுலா பயணிகளுக்கு வட கொரியா அனுமதி அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com