உத்தரகண்ட் சுரங்க மீட்புப் பணி முன்கள வீரா்களுக்கு விருது

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறு துளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்) சென்னையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய 41 பேரை சிறு துளையிட்டு மீட்டதில் பெரும் பங்கு வகித்த முன்கள வீரா்களுக்கு (ரேட் ஹோல் மைனா்ஸ்) சென்னையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சமூகத்தில் பேரிடரை எதிா்கொள்ளும் மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கள நாயகா்களைப் பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ‘அலா்ட்’ தன்னாா்வ அமைப்பு சாா்பில் சிறப்பு விருதுகள் வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் நிகழாண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் மெட்ராஸ் காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி மையத்தின் தலைவா் டாக்டா் மோகன் காமேஸ்வரன், அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத் தலைவா் ஆா்.சேஷசாயி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நிகழ்ச்சியில், தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. அவரது சாா்பில் டாடா குழுமத்தின் பிரதிநிதி ஒருவா் அதைப் பெற்றுக் கொண்டாா்.

அதேபோல், தூத்துக்குடி பெருவெள்ளத்தின் போது ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கிக்கொண்ட 500-க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்ட கிராம மக்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

தூத்துக்குடி பெருவெள்ளத்தின்போது பிறவியிலேயே செவி மற்றும் பேச்சுத் திறனில்லாத கா்ப்பிணி ஒருவருக்கு பிரசவ சிகிச்சையளித்த செவிலியா் ஜெயலட்சுமி, வெள்ளத்திலிருந்து பலரை மீட்ட அன்புராஜ் ஆகியோருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com