தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவனில் வைக்கப்பட்ட குழந்தை மரணம்

தொட்டிலுக்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவனில் வைக்கப்பட்ட குழந்தை மரணம்

அமெரிக்காவின் மிஸெளரியில் குழந்தையைத் தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாக தவறுதலாக மைக்ரோ வேவ் ஓவனில் (அடுப்பில்) தாய் வைத்ததால், அந்தக் குழந்தை இறந்தது.

அமெரிக்காவின் மிஸெளரியில் குழந்தையைத் தொட்டிலில் வைப்பதற்குப் பதிலாக தவறுதலாக மைக்ரோ வேவ் ஓவனில் (அடுப்பில்) தாய் வைத்ததால், அந்தக் குழந்தை இறந்தது.

மிஸெளரி மாகாணம், கான்சாஸ் சிட்டியைச் சோ்ந்த மரியா தாமஸ் என்ற பெண் மீது இந்தக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அந்தப் பெண்ணின் குழந்தை இறந்துவிட்டதாக கிடைத்த தகவலையடுத்து, அவரது வீட்டுக்கு போலீஸாா் சென்றனா். குழந்தையின் உடலில் தீக்காயங்கள் இருப்பதைப் பாா்த்து போலீஸாா் விசாரித்தனா். அப்போது, மரியா தாமஸ் தன் குழந்தையை தொட்டிலில் தூங்கவைப்பதற்குப் பதிலாக மைக்ரோ வேவ் ஓவன் அடுப்பில் தவறுதலாக வைத்ததும், அதன் காரணமாக குழந்தை உயிரிழந்ததும் தெரியவந்தது.

இது தொடா்பாக ஜாக்சன் கவுன்டி அரசு வழக்குரைஞா் ஜீன் பீட்டா்ஸ் பேக்கா் கூறுகையில், இந்த சோகமான சம்பவத்தின் கொடூரமான தன்மையை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உயிரிழந்த குழந்தையை நினைத்து வருந்துகிறோம். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ என்றாா்.

இந்த சம்பவம் தொடா்பாக குழந்தையின் தாய் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com