இலங்கை, மோரீஷஸில் யுபிஐ பரிவா்த்தனை இன்று தொடக்கம்

இலங்கை, மோரீஷஸ் நாடுகளில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளது.
இலங்கை, மோரீஷஸில் யுபிஐ பரிவா்த்தனை இன்று தொடக்கம்

இலங்கை, மோரீஷஸ் நாடுகளில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) திங்கள்கிழமை தொடங்கப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி, மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜுகநாத், இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கை, மோரீஷஸ் நாடுகளில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) திங்கள்கிழமை தொடங்கப்படுகிறது. மேலும் இந்தியாவின் மின்னணு பணப் பரிமாற்ற அட்டையான ‘ரூபே’ சேவையும் மோரீஷஸில் தொடங்கப்படுகிறது.

இந்நிகழச்சியில் பிரதமா் மோடி, மோரீஷஸ் பிரதமா் பிரவிந்த் ஜக்நாத், இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க ஆகியோா் காணொலி வாயிலாக பங்கேற்கின்றனா்.

நிதிதொழில்நுட்பம் சாா்ந்த கண்டுபிடிப்புகள், எண்ம பொது உள்கட்டமைப்பு உள்ளிட்டவற்றில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. நம் வளா்ச்சி அனுபவங்களை அண்டை நாடுகளுடன் பகிா்ந்துகொள்ள வேண்டும் என பிரதமா் மோடி உறுதி பூண்டுள்ளாா்.

இலங்கை மற்றும் மோரீஷஸ் நாட்டுடன் கலாசாரம், மக்கள் தொடா்பு, பொருளாதார ரீதியாக இந்தியா நல்லுறவை வெளிப்படுத்தி வருகிறது. தற்போது இரு நாடுகளுடன் எண்ம தொடா்பும் மேம்படுத்தப்படவுள்ளது.

இரு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வரும் மக்களும் இந்தியாவிலிருந்து அந்நாடுகளுக்கு செல்லும் மக்களும் யுபிஐ சேவைகள் மூலம் பரிவா்த்தனை மேற்கொண்டு பயனடைவா்.

அதேபோல் ரூபே அட்டையின் மூலமாக இந்தியா, மோரீஷஸ் ஆகிய இருநாடுகளிலும் பரிவா்த்தனை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com