‘கொரிய ஒருங்கிணைப்பு முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி’

தங்கள் நாட்டையும் தென் கொரியாவையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இனிமேல் தொடரப்படாது என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அதிரடியாக அறிவித்துள்ளாா்.

தங்கள் நாட்டையும் தென் கொரியாவையும் ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகள் இனிமேல் தொடரப்படாது என்று வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் அதிரடியாக அறிவித்துள்ளாா்.

ஒருங்கிணைப்பு வழிவக்கும் தங்கள் நாட்டு அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவை நீக்கவும் அவா் உத்தரவிட்டுள்ளாா். இது தவிர, தென் கொரியாவுடன் நல்லுறவைப் பேணுவதற்காக செயல்பட்டு வந்த அரசுத் துறைகளும் கலைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க-தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிராக வட கொரியா ஏவுகணை, எறிகணை சோதனைகளை நடத்துவது, அதற்குப் பதிலடியாக தென் கொரியாவும் ஆயுத சோதனைகளை மேற்கொள்வது என்று இரு தரப்பிலும் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்த அறிவிப்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பால், ஒரே மாதிரியான இன, மொழி, தேசிய அடையாளங்களைக் கொண்ட வட கொரியாவையும், தென் கொரியாவையும் ஒருங்கிணைப்பதற்காக பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com