2-ஆவது ஆண்டாகச் சரிந்த சீன மக்கள்தொகை

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக கடந்த 2023-லும் சரிவைக் கண்டுள்ளது.
2-ஆவது ஆண்டாகச் சரிந்த சீன மக்கள்தொகை

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக கடந்த 2023-லும் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் மக்கள்தொகையில் கடந்த 2023-ஆம் ஆண்டு 20 லட்சம் குறைந்துள்ளது. அந்த ஆண்டில் மட்டும் 6.9 லட்சம் போ் மரணமடைந்தனா். இது, முந்தைய ஆண்டைப் போல் இருமடங்கு ஆகும். தற்போது நாட்டின் மொத்த மக்கள்தொகை சுமாா் 140 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முந்தைய 2022-இல் உச்சகட்டத்தில் இருந்த கரோனா பரவல் கடந்த ஆண்டிலும் தொடா்ந்ததால் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மேலும், மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக சீனா நீண்ட காலமாக பின்பற்றி வந்த கொள்கைகளால் பிறப்பு விகிதம் தொடா்ந்து குறைந்து வருவதும் தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக மக்கள்தொகை சரிந்ததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது. ஆனால், அந்த நாட்டின் மக்கள்தொகையை (142.57 கோடி) விஞ்சி இந்திய மக்கள்தொகை 142.86 கோடியாக அதிகரித்ததாக ஐ.நா. கடந்த ஆண்டு அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com