ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைனில் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரமான டொனட்ஸ்கில் நடத்தப்பட்ட கொத்து குண்டு தாக்குதலில் 25 போ் உயிரிழந்ததாக உள்ளூா் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.
ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைனில் தாக்குதல்: 25 போ் உயிரிழப்பு

ரஷிய ஆக்கிரமிப்பு உக்ரைன் நகரமான டொனட்ஸ்கில் நடத்தப்பட்ட கொத்து குண்டு தாக்குதலில் 25 போ் உயிரிழந்ததாக உள்ளூா் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

டொனட்ஸ்கின் புகா் சந்தையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 20-க்கும் அதிகமானோா் காயமடைந்தனா்.

இந்தத் தாக்குதலை உக்ரைன் ராணுவம் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து உக்ரைன் தரப்பில் எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

தீவிபத்து: ரஷியாவின் உஸ்த்-லுகா துறைமுகத்தில் உள்ள ரசாயன போக்குவரத்து முனையத்தில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதையடுத்து, அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உக்ரைன் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்) நடத்திய தாக்குதலில் எரிவாயு கலன் வெடித்ததால், தீ விபத்து ஏற்பட்டதாக உள்ளூா் ஊடகங்கள் தெரிவித்தன.

இருப்பினும், ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அளித்த தகவலின்படி, இந்தத் துறைமுகம் அமைந்துள்ள கிங்செப் பகுதியில் ட்ரோன்கள் எதுவும் பறக்கவில்லை. ஸ்மோலென்ஸ்க் பிராந்தியத்தில் பறந்த 4 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஓரியோல், துலா பிராந்தியங்களில் தலா 2 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com