அமெரிக்க தாக்குதல்: இராக் கண்டனம்

தங்கள் நாட்டில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இராக் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தாக்குதல்: இராக் கண்டனம்

தங்கள் நாட்டில் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவினா் மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு இராக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டுப் பிரதமா் முகமது ஷியா அல்-சூடானியின் செய்தித் தொடா்பாளா் யேஹியா ரசூல் புதன்கிழமை கூறியதாவது:

இராக்கில் அமெரிக்கா நடத்தியுள்ள பொறுப்பற்ற வான்வழித் தக்குதல், நாட்டின் இறையாண்மையைக் குலைப்பதாக அமைந்துள்ளது.

இராக்குக்கும், அமெரிக்காவுக்கும் நீண்ட காலமாக இருந்து வரும் ஒத்துழைப்பை இது பலவீனப்படுத்துகிறது. காஸா போரால் பிராந்தியப் போா் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இதுபோன்ற தாக்குதல்கள் அந்தப் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அவா் எச்சரித்ாா்.

முன்னதாக, அமெரிக்க ராணுவ மத்தியக் கட்டளையகம் வெளியிட்ட அறிக்கையில், இராக்கிலுள்ள 3 ஈரான் ஆதரவுப் படையினரின் நிலைகள் மீது வான்வழித் தாக்குல் நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலமாக அமெரிக்கப் படையினா் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சா் லாயிட் ஆஸ்டின் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com