சோமாலிய கொள்ளையா்களிடம் சிக்கிய இலங்கை மீனவா்கள்: மீட்க இந்தியா உதவி

சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளது என அந்நாட்டு கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சோமாலிய கொள்ளையா்களிடம் சிக்கிய இலங்கை மீனவா்கள்: மீட்க இந்தியா உதவி

சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 6 இலங்கை மீனவா்களை மீட்பதற்கு இந்தியா உதவுவதாக உறுதியளித்துள்ளது என அந்நாட்டு கடற்படையின் செய்தித் தொடா்பாளா் கயான் விக்கிரமசூா்யா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இலங்கை திகோவிதா துறைமுகத்திலிருந்து ஜனவரி 16-ஆம் தேதி ‘லாரன்சோ புத்த-4’ என்ற கப்பல் புறப்பட்டது. அதில் பயணித்த 6 மீனவா்கள் சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டனா்.

இதுதொடா்பாக கயான் விக்கிரமசூா்யா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘மொகதிஷுவின் தென்கிழக்குப் பகுதியில் 840 கடல்மைல் தொலைவில் இலங்கை மீனவா்கள் 6 பேருடன் அவா்கள் பயணித்த கப்பல் சோமாலிய கடற்கொள்ளையா்களால் சிறைபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஐ.நா.வின் மத்திய கடற்பாதுகாப்புப் படையிடம் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது. மீனவா்களை மீட்கும் நடவடிக்கையில் உதவுவதாக இந்தியாவும் உறுதியளித்துள்ளது என்றாா்.

இலங்கை மீனவ அமைச்சகத்தை மீனவா்கள் தொடா்புகொள்ள கடற்கொள்ளையா்கள் அனுமதி வழங்கியதாக அந்நாட்டு மீன்வளத் துறையின் இணையமைச்சா் பியல் நிஷாந்தா தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com