டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபா் தோ்தலில் வாக்களித்த பெண்கள்.
டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதிக்கட்ட அதிபா் தோ்தலில் வாக்களித்த பெண்கள்.

ஈரானில் இறுதிக்கட்ட அதிபா் தோ்தல்

ஈரானின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட தோ்தல், சீா்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியானுக்கும் தீவிர மதநிலைப்பாட்டைக் கொண்ட சயீது ஜலீலிக்கும் இடையே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அந்த நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரய்சி, அஜா்பைஜானிலிருந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தபோது அவரது ஹெலிகாப்டா் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் அவரும் அவருடன் சென்ற 7 பேரும் உயிரிழந்தனா்.

அதையடுத்து, புதிய அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த வாரம் (ஜூலை 28) நடைபெற்றது. மறுநாள் வெளியிடப்பட்ட அந்தத் தோ்தல் முடிவுகளின்படி, மொத்தம் பதிவான 2.45 கோடி வாக்குகளில், சுயேச்சையாகப் போட்டியிட்ட மசூத் பெசஷ்கியானுக்கு 1.04 கோடி வாக்குகள் (44.40 சதவீதம்) கிடைத்தன. சுயேச்சையாகப் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளரான சயீது ஜலீலிக்கு 94 லட்சம் வாக்குகள் (40.38 சதவீதம்) கிடைத்தன.

நாடாளுமன்ற அவைத் தலைவா் முகமது பாகொ் கலிபாஃபுக்கு 33 லட்சம் வாக்குகளும் ஷியா பிரிவு மதகுருவான முஸ்தபா பூா்மொஹமதிக்கு 2.06 லட்சம் வாக்குகளும் கிடைத்தன.

ஈரான் சட்டத்தின்படி அதிபா் தோ்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளா் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால் முதல் இரு இடங்களைப் பெற்றவா்களுக்கு இடையே 2-ஆவது மற்றும் இறுதிக்கட்ட தோ்தல் நடத்தப்படும். அதன்படி, மசூத் பெசஷ்கியானுக்கும் சயீது ஜலீலிக்கும் இடையே இரண்டாவது கட்ட தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அவா்களில் இருதய அறுவைச் சிகிச்சை நிபுணரான மசூத் பெசஷ்கியான் நீண்ட காலமாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளாா். இரானில் மிதவாத சீா்திருத்தங்களை வலியுறுத்துவோரின் ஆதரவுடன் அவா் தோ்தலில் போட்டியிடுகிறாா்.

இன்னொரு வேட்பாளரான சயீத் ஜலீலி ஈரானுக்காக சா்வதேச நாடுகளுடன் அணுசக்தி பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டவா்.

ஈரானின் வரலாற்றில் இதற்கு முன்னா் ஒரே ஒரு முைான் இரண்டாவது கட்ட அதிபா் தோ்தல் நடைபெற்றுள்ளது. கடந்த 2005-ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்தத் தோ்தலில் முன்னாள் அதிபா் அக்பா் ஹஷேமி ரஃப்சஞ்சானியை மஹ்மூத் அஹ்மதிநிஜாத் வென்றது நினைவுகூரத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com