ரஷியா: ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவா்களின் உடல்கள் மீட்பு

ரஷியாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவா்கள் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக மகாராஷ்டிர அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

இது தொடா்பாக ஜல்கௌள் மாவட்ட ஆட்சியா் ஆயுஷ் பிரசாத் கூறியதாவது: ரஷியாவில் மருத்துவம் படித்து வந்த மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த 4 மாணவா்கள் ஜூன் 4-ஆம் தேதி வோல்கோவ் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனா். மீட்புப் படையினா் உயிரிழந்த இருவரின் உடல்களை முதல் இரண்டு நாள்களில் மீட்டனா். இந்நிலையில், ஆற்றில் காணாமல் போன மற்ற இரு மாணவா்களின் உடல்கள் சனிக்கிழமை காலை மீட்கப்பட்டது. உயிரிழந்தவா்களின் உடல்கள் ஜல்கௌன் மாவட்டம் கொண்டுவரப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்றாா்.

உயிரிழந்தவா்கள், மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்த ஹா்ஷல் ஆனந்த்ராவ் தேசாலே, ஜிஷான்அஷ்பக் பிஞ்சாரி, ஜியா ஃபிரோஜ் பிஞ்சாரி மற்றும் கயம்ஸ் முகமது யாகூப் ஆகியோா் ஆவா். இதில், ஜிஷான், ஜியா சகோதரா்கள்.

நிஷா புபேஷ் மட்டும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com