காஸா போர்: 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் பலி!

பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காஸாவில் பலி!
காஸாவில் குடியிருப்புகள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சில் படுகாயமடைந்தோர்
காஸாவில் குடியிருப்புகள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சில் படுகாயமடைந்தோர் படம் | ஏபி

பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் காஸாவில் நிகழும் சண்டையில் கொல்லப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் 13 செய்தி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 50 பத்திரிகையாளர்கள் அடங்கிய குழு, களத்திற்குச் சென்று 4 மாதங்களாக மேற்கொண்ட விரிவான விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியாகியுள்ளது.

’பத்திரிகை’ என்ற அடையாள அட்டை அணிந்திருந்தும் அவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் ஊடக உலகில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, பத்திரிகை சுதந்திரம் மீதான வெளிப்படையான தாக்குதல் இது என பத்திரிகையாளர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் குறித்து விளக்கமளித்துள்ள இஸ்ரேல் ராணுவம், பத்திரிகையாளர்களை தாக்கவேண்டும் என்கிற முனைப்புடன் தங்கள் நாட்டு ராணுவம் செயல்படவில்லை என்றும், ஹமாஸ் படைகள் இருப்பிடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்டுள்ள வான்வழித் தாக்குதல்களில் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடுமெனவும் தெரிவித்துள்ளது.

காஸாவில் குடியிருப்புகள் மீதான இஸ்ரேலின் குண்டுவீச்சில் படுகாயமடைந்தோர்
முடியும் நிலையில் காஸா தீவிர தாக்குதல் நடவடிக்கை: லெபனானில் தொடங்கும்

தீவிரமடையும் சண்டையால், பாலஸ்தீனத்தில் 200க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அது மட்டுமன்றி அவர்களின் குடும்பத்தினர் பலரும் இந்த சண்டையில் கொல்லப்பட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கள ஆய்வில், இஸ்ரேல் ராணுவம் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதை உறுதிசெய்ய முடிந்ததாகவும் ஒருசில ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறுகிய காலத்தில் இத்தனை பேர் கொல்ல்ப்படிருபதை ஏற்றுக்கொள்ளவேஎ முடியாதென ஆதங்கத்துடன் தெரிவித்துள்ள ஏஎஃப்பி செய்தி நிறுவன இயக்குநர் ஃபில் சேட்விண்ட், உலக அரங்கில் இது குறித்து அரசுகள் மௌனம் காப்பது மிகுந்த வேதனையளிப்பதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

ரஷியாவின் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில், 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருந்தால் உலக அரசுகள் இதே பாணியில் மௌனம் காத்திருக்காதென கண்டனத்தை பதிவு செய்துள்ளார் பாலஸ்தீன பத்திரிகையாளர் சங்க செய்தித்தொடர்பாளர் ஷுரூக் ஆஸாத்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com