விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி!

கலிபோர்னியாவில் விருந்து உபசார நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி!

கலிபோர்னியாவில் விருந்து உபசார நிகழ்ச்சியில் பங்கேற்ற விருந்தினர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. நிகழாண்டு தொடக்கத்திலிருந்து தற்போது வரை இந்திய-அமெரிக்க மற்றும் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 6 -க்கும் மேற்பட்ட நபா்கள், மாணவா்கள் பல்வேறு தாக்குதல்களால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மிக சமீபத்தில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்காவில் வசித்து வந்த கொல்கத்தாவை சேர்ந்த 34 வயதான பரத நாட்டியக் கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கலிபோர்னியாவில் நடைபெற்ற ஓர் விருந்து உபசார நிகழ்ச்சியில் புகுந்த சில மர்ம நபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி!
பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீஃப் பதவியேற்பு

கலிபோர்னியாவின் கிங் சிட்டி பகுதியில் உள்ள ஓர் குடியிருப்பு வளாகத்தில் நேற்று (மார்ச் 3) மாலை விருந்து உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது முகமூடி அணிந்தபடி காரில் இருந்து இறங்கிய சிலர், திடீரென விருந்து நிகழ்ச்சியில் நுழைந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், அவர்கள் கண் இமைக்கும் நேரத்திற்குள் தங்களிடமிருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அவர்கள் தப்பியோடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த கோர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கிச்சூடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com