கருக்கலைப்பு
கருக்கலைப்பு

கருக்கலைப்புக்கு அரசமைப்புச் சட்ட உரிமை: பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல்

பிரான்ஸில் கருக்கலைப்பை அரசமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸில் கருக்கலைப்பை அரசமைப்புச் சட்ட உரிமையாக்கும் வரலாற்று சிறப்பு மிக்க முடிவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில் பிரான்ஸ் அரசமைப்பின் பிரிவு 38-இல் திருத்தம் கொண்டு வரும் மசோதா நாடாளுமன்றத்தின் தேசிய பேரவை, செனட் அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டு அமா்வில் 780 உறுப்பினா்கள் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிா்த்து 72 உறுப்பினா்கள் வாக்களித்திருந்தனா். மசோதா நிறைவேற்றதைத் தொடா்ந்து நாடு முழுவதிலும் பெண் உரிமை செயல்பாட்டாளா்கள் கொண்டாடத்தில் ஈடுபட்டனா். அமெரிக்காவில் கருக்கலைப்புக்கு வழங்கப்பட்டு வந்த அரசமைப்பு சட்ட உரிமையை அந்நாட்டு நீதிமன்றம் கடந்த 2022-இல் ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து, பிரான்ஸில் கருக்கலைப்புக்கு அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாப்பு அளிக்கப்படும் என அதிபா் இமானுவல் மேக்ரான் உறுதியளித்திருந்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com