காஸாவில் ஒரே நாளில் 90 பாலஸ்தீனர்கள் பலி!

காஸாவில் பலியாகியுள்ள பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30,410 ஆக உயர்ந்துள்ளது.
ஒரே நாளில் 90 பாலஸ்தீனர்கள் பலி
ஒரே நாளில் 90 பாலஸ்தீனர்கள் பலி

காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காஸாவில் பலியாகிய பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 30,410 ஆக உயர்ந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் காஸாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர். 177 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மொத்தம் 71,700 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆக்கிரமிப்புப் படைகள் ஆம்புலன்ஸ் மற்றும் மீட்புக் குழுக்கள் பல இடங்களுக்கு குறிப்பாக வடக்குப் பகுதியில் வருவதைத் தடுத்து வருகின்றனர். மேலும் சிலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையில், வடக்கு காஸா பகுதியில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் , இஸ்ரேலிய முற்றுகையின் காரணமாக சரியான மருத்துவச் சிகிச்சை இல்லாததால் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் கடந்த வாரம் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com