பிரான்ஸ்: கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக்கும் மசோதா மீது வாக்கெடுப்பு

பிரான்சில் கருக்கலைப்பை பெண்களின் அரசமைப்பு உரிமையாக்கும் மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் வெர்செய்ல்ஸ் மாளிகையில் கூடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
பிரான்ஸ் வெர்செய்ல்ஸ் மாளிகையில் கூடியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் படம் | ஏபி

பிரான்சில் கருக்கலைப்பை பெண்களின் அரசமைப்பு உரிமையாக்கும் மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

முன்னதாக நாடாளுமன்ற கீழவையில் கடந்த ஜனவரியில், பெண்களின் அரசமைப்பு உரிமையாக்கும் மசோதாவுக்கு கீழவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

இந்நிலையில், இந்த மசோதாவை சட்டமாக்கி அமல்படுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஐந்தில் மூன்று பங்கினர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பில் மொத்தமுள்ள 925 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில், அனைவரும் ஒருமனதாக மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பிரான்சில் அரசமைப்பின் 34-வது பிரிவு அமல்படுத்தப்படுமென்று தெரிகிறது.

கருக்கலைப்பை பெண்களின் அரசமைப்பு உரிமையாக்க அந்நாட்டு மக்களும் பெருவாரியாக ஆதரவு தெரிவித்திருப்பது சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் 1975 ஆம் ஆண்டு முதல் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக உள்ளது. இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம், உலகிலேயே முதல் நாடாக பிரான்சில், அரசமைப்பில் பெண்களுக்கு வழங்கப்படும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருக்கலைப்பு உரிமை மாற உள்ளது குறிப்பிடத்தக்கது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com