காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேலுக்கு நெருக்கடியை அதிகரித்தது அமெரிக்கா

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அளித்து வரும் நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.
காஸா போர் நிறுத்தம்: இஸ்ரேலுக்கு நெருக்கடியை அதிகரித்தது அமெரிக்கா

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேலுக்கு அளித்து வரும் நெருக்கடியை அமெரிக்கா மேலும் அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியதாவது:

இஸ்ரேல் மக்களுக்கு ஹமாஸ் அமைப்பால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரம், தொடர் தாக்குதலால் காஸா பகுதி மக்கள் அனுபவித்து வரும் மிகப் பெரிய துயரங்களையும் மறுக்க முடியாது. அதனை கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

அடுத்த 6 வாரங்களுக்கு அந்தப் போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும். இதனைப் பயன்படுத்தி, ஹமாஸ் அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளை விடுவிக்கவும், காஸா பகுதி மக்களுக்குத் தேவையான நிவாரணப் பொருள்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தவும் முடியும்.

பாலஸ்தீன மக்களின் கெüரவம், சுதந்திரம், சுயாட்சி உரிமைகளுக்கு மதிப்பளிப்பதுதான் இஸ்ரேலுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கும்.

காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயார் என்று ஹமாஸ் அமைப்பு கூறியுள்ளது. இதற்கான வரைவு ஒப்பந்தமும் தயார் நிலையில் உள்ளது என்றார் கமலா ஹாரிஸ்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் இந்தக் கருத்தை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் பிரமீளா ஜெயபால் வரவேற்றுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காஸாவில் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்படவேண்டும் என்று துணை அதிபர் கமலா ஹாரிஸ் வலியுறுத்தியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா இவ்வளவு உறுதியான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளது இதுவே முதல்முறையாகும்' என்றார்.

இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினர் கடந்த அக். 7}ஆம் தேதி நுழைந்து 1,200}க்கும் மேற்பட்டவர்களை படுகொலை செய்தனர். அத்துடன் சுமார் 240 பேரை அங்கிருந்து அவர்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனர்.

அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டுவதாகவும், பிணைக் கைதிகளை மீட்பதாகவும் சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச முயற்சியின் பலனாக இஸ்ரேல்}ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட 7 நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதிகளாகக் கடத்திச் செல்லப்பட்ட 105 பேரை ஹமாஸ் அமைப்பு

விடுவித்தது.

எனினும், போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிப்பதற்கான பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் மீண்டும் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com