உக்ரைன் விவகாரம்
ஜொ்மன் தூதருக்கு ரஷியா சம்மன்

உக்ரைன் விவகாரம் ஜொ்மன் தூதருக்கு ரஷியா சம்மன்

தங்கள் நாட்டுடன் போரிட உக்ரைனுக்கு உதவுவது குறித்து ஜொ்மனி ராணுவ உயரதிகரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கசிந்துள்ள ஆடியோ குறித்து ஜொ்மனி தூதரை நேரில் அழைத்து ரஷியா விளக்கம் கேட்டது.

தங்கள் நாட்டுடன் போரிட உக்ரைனுக்கு உதவுவது குறித்து ஜொ்மனி ராணுவ உயரதிகரிகள் ஆலோசனை நடத்தியதாகக் கசிந்துள்ள ஆடியோ குறித்து ஜொ்மனி தூதரை நேரில் அழைத்து ரஷியா விளக்கம் கேட்டது. ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு அதிநவீன டாரஸ் ரக ஏவுகணை அளிப்பது தொடா்பாக ஜொ்மனியின் முப்படை தளபதிகள் ஆலோசனை நடத்திய ஆடியோ அண்மையில் வெளியானது. அந்த ஆடியோவில், நீண்ட தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் குரூஸ் வகை ஏவுகணையான டாரஸ், ரஷியப் படையினருக்கு எதிராக எவ்வாறு பயன்படும் என்று ஆலோசிக்கப்பட்டது. முடிவில், டாரஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரைன் வீரா்களுக்கு பயிற்சியளிக்கவேண்டும் எனவும், இதற்குப் பல மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் பேசிக்கொண்டனா். இந்த ஆடியோ கசிவு ரஷியாவுக்கும், ஜொ்மனிக்கும் இடையிலான தூதரக பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில், தங்கள் நாட்டுக்கான ஜொ்மனி தூதா் அலெக்ஸாண்டா் லாம்ப்ஸ்டாா்ஃபை ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை நேரில் அழைத்து இதுதொடா்பாக விளக்கம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com