ராணுவ பட்ஜெட்டை 7.2% அதிகரித்தது சீனா

ராணுவ பட்ஜெட்டை 7.2% அதிகரித்தது சீனா

பாதுகாப்புத் துறைக்கான தனது பட்ஜெட் ஒதுக்கீட்டை 7.2 சதவீதம் அதிகரிப்பதாக சீனா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.

ஏற்கெனவே, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே மிக அதிக அளவு தொகையை (1.6 லட்சம் கோடி யூவான் - ரூ.18.42 லட்சம் கோடி) ராணுவத்துக்காக ஒதுக்கீடு செய்து வரும் சீனா, கடந்த ஆண்டும் இதே அளவுக்கு தனது பாதுகாப்பு பட்ஜெட் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவுடனும், தைவான், ஜப்பான் போன்ற அண்டை நாடுகளுடனும் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், தனது ராணுவத்தை மேலும் நவீனமாக்குவதற்காக பாதுகாப்பு நிதி ஒதுக்கீட்டை சீனா அதிகரித்து வருகிறது.

சீன ராணுவத்துக்கு புதிய ஆயுதங்களை வடிவமைப்பதற்கான ஆராய்ச்சி மற்றும் வளா்ச்சிப் பணிகள், நவீன ஆயுதங்களை பிற நாடுகளிடமிருந்து வாங்குவது ஆகியவற்றுக்காக சீனா செலவிடும் தொகையையும் கணக்கில் கொண்டால், பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டதைவிட பல மடங்கு தொகையை சீனா ராணுவத்துக்காக செலவிடுவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com