அமெரிக்க அதிபர் தேர்தல்: நிக்கி ஹேலி விலகல்..? டிரம்ப்புக்கு மீண்டும் வாய்ப்பு!

குடியரசுக் கட்சி சார்பில் அதிபா் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான இடங்களில் தேர்வாகியுள்ளார்.
நிக்கி ஹேலி
நிக்கி ஹேலி

அமெரிக்காவின் 47-வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான அதிபா் தேர்தல், இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் அதிபா் பதவிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பெரும்பாலான இடங்களில் தேர்வாகியுள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபா் வேட்பாளராக டிரம்பை எதிர்த்துப் போட்டியிட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிக்கி ஹேலி தெற்கு கரோலினாவிலும் தோல்வியைடைந்தார். எனினும் தான் போட்டியில் நீடிப்பேன் என்று அவா் தெரிவித்திருந்தார்.

இநிலையில், இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி அமெரிக்க அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிபராக டிரம்ப் பதவி வகித்தபோது ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பு வகித்த நிக்கி ஹேலி, கடந்த 2011 முதல் 2017-ஆம் ஆண்டு வரை தெற்கு கரோலினா ஆளுநராகப் பதவி வகித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, குடியரசுக் கட்சி சார்பில் அதிபா் வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபா் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக மீண்டும் களமிறங்கும் தற்போதைய அதிபர் ஜோ பைடனை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் நிலையில், அதிபர் தேர்தலில் போட்டி கடுமையாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com