காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய குண்டுவீச்சால் எழுந்த புகைமண்டலம்.
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய குண்டுவீச்சால் எழுந்த புகைமண்டலம்.

காஸா உயிரிழப்பு 30,717-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேல் சுமாா் 5 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,717-ஆக அதிகரித்துள்ளது.

காஸாவில் இஸ்ரேல் சுமாா் 5 மாதங்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,717-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை கூறியதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 86 போ் உயிரிழந்தனா்; 113 போ் காயடைந்தனா். இத்துடன், இந்தப் பகுதியில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 30,717-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 72,156 போ் காயமடைந்துள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இஸ்ரேலுக்குள் தரை, வான், கடல் வழியாக ஹமாஸ் படையினா் கடந்த அக். 7-ஆம் தேதி நுழைந்து 1,200-க்கும் மேற்பட்டவா்களை படுகொலை செய்தனா். அத்துடன் சுமாா் 240 பேரை அங்கிருந்து அவா்கள் பிணைக் கைதிகளாகக் கடத்திச் சென்றனா். அதையடுத்து, ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக்கட்டப்போவதாக சூளுரைத்த இஸ்ரேல், காஸாவில் வான்வழியாகவும், தரைவழியாகவும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com