200க்கும் அதிகமான முறை கரோனா தடுப்பூசி..! -ஆச்சரியப்படுத்தும் மனிதர்

ஜெர்மனியில் 2 ஆண்டுகளில் 200க்கும் அதிகமான முறை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் எவ்வித பக்கவிளைவுகளும் இன்றி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
200க்கும் அதிகமான முறை கரோனா தடுப்பூசி..! -ஆச்சரியப்படுத்தும் மனிதர்

ஜெர்மனியில் 200க்கும் அதிகமான முறை கரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபர் எவ்வித பக்கவிளைவுகளுமின்றி நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் மாக்டேபர்க் பகுதியைச் சேர்ந்த 62 வயதான முதியவர் ஒருவர் 29 மாதங்களில் 217 தடவை, கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ள சம்பவம் மருத்துவ உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2021-ஆம் ஆண்டு ஜூன் மாதம், முதல் முறையாகக் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அந்த நபர், கடந்த ஆண்டு நவம்பர் வரை தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு வந்துள்ளார். இதன்மூலம் தோராயமாக, 4 நாள் இடைவெளிக்கு ஒருமுறை, அந்த நபர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளார். அதில் சுவாரசியம் என்னவென்றால், அந்த நபர் பைசர், மாடர்னா உள்பட 8 விதமான கரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளார்.

இத்தனை முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் அந்த மனிதரின் உடலில் நோயெதிர்ப்பு செல்கள் அதிகரித்திருந்தாலும், நோயெதிர்ப்பு ஆற்றல் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கவோ குறையவோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட தனிநபரின் உடல் அமைப்பை பொருத்து, அவருடைய உடலுக்கு எவ்வித பக்கவிளைவுகளும் உண்டாகவில்லை என்று தெரிவிக்கும் மருத்துவர்கள், இதனை அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானது என எடுத்துக் கொள்ள முடியாதென எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு தனி நபர் தனது உடலில் அதிகபட்சமாக 3 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் சரி, 200 முறை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் சரி, ஒரே விதமான பாதுகாப்பை தான் அவை அளிக்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com