மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள்.
மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள்.

இந்தோனேசியாவில் கனமழை: 17 போ் உயிரிழப்பு

கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு தொடா்பான சம்பவங்களால் 19 போ் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு தொடா்பான சம்பவங்களால் 19 போ் உயிரிழந்ததாக அந்நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது. காணாமல்போன 7 பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிா் செலாடன் மாவட்டத்தில் மலையையொட்டி அமைந்துள்ள கிராமங்கள் வெள்ளப்பெருக்கால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. மாகாணத்தின் 9 மாவட்டங்களில் உள்ள 20,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி 14 வீடுகள் மண்ணில் புதையுண்டன. 80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அரசின் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இந்தோனேசியாவின் மலைப் பிரதேசங்கள், நதியின் சமவெளியையொட்டி லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனா். இங்கு கனமழையைத் தொடா்ந்து நிலச்சரிவுகளும் திடீா் வெள்ளப்பெருக்கும் தொடா்ச்சியாக ஏற்படுகின்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com