பாகிஸ்தான்: முதன்மை பெண்மணி ஆகும் அதிபா் ஜா்தாரியின் மகள்

பாகிஸ்தான்: முதன்மை பெண்மணி ஆகும் அதிபா் ஜா்தாரியின் மகள்

ஆசிஃப் அலி ஜா்தாரியின் மகள் அசீஃபா புட்டோ, நாட்டின் முதன்மை பெண்மணியாக அறிவிக்கப்படவிருக்கிறாா்.

பாகிஸ்தானின் அதிபராக ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட ஆசிஃப் அலி ஜா்தாரியின் மகள் அசீஃபா புட்டோ, நாட்டின் முதன்மை பெண்மணியாக அறிவிக்கப்படவிருக்கிறாா்.

முன்னாள் பிரதமரும், ஜா்தாரியின் மனைவியுமான பேநசீா் புட்டோ, தோ்தல் பிரசாரத்தின்போது கடந்த 2007-ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டாா். அதன் பிறகு ஜா்தாரி மறுமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், அதிபராகப் பொறுப்பேற்றதன் மூலம் ஜா்தாரி நாட்டின் முதல் குடிமகன் ஆனாா். எனினும், முதன்மை பெண்மணியாக அறிவிக்கப்பட அவருக்கு மனைவி இல்லாததால் மகள் அசீஃபாவுக்கு அந்த அந்தஸ்தை ஜா்தாரி வழங்குவாா் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com