ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்
படம் | ஏபி

ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.

ஜெர்மனியில் ரயில் ஓட்டுநர்களின் பணிச்சுமை அதிகரிப்பதைக் கருத்திற்கொண்டு, வேலை நேரத்தை வாரத்திற்கு 38 மணி நேரத்திலிருந்து 35 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ரயில் ஓட்டுநர்கள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஊதியக் குறைப்பில் அரசு ஈடுபடக் கூடாதென்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக ஜெர்மனியில் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படாததால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். எனினும், ஜெர்மனியில் பயணிகளின் வசதிக்காக தனியார் ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கின.

இதனிடையே, ரயில் ஓட்டுநர்கள் சங்கம் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வர வேண்டுமென அந்நாட்டின் போக்குவரத்துத்துறை அமைச்சர் வோல்கெர் விஸ்ஸிங் அழைப்பு விடுத்துள்ளார். பேச்சுவார்த்தை நடத்தாமல் போராட்டம் நடத்துவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com