முகமது மூயிஸ்
முகமது மூயிஸ்

மாலத்தீவை கண்காணிப்பதில் பிற நாடுகளுக்கு கவலை வேண்டாம்: அதிபா் முகமது மூயிஸ்

மாலத்தீவின் எல்லையைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளாா்.

மாலத்தீவின் எல்லையைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம் என அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்துள்ளாா். நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைக் கண்காணிக்க துருக்கியிடமிருந்து 3 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) மாலத்தீவு வாங்கியுள்ளது. இந்த ட்ரோன்களை மாலத்தீவின் தேசிய பாதுகாப்புப் படையில் இணைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அதிபா் முகமது மூயிஸ் பேசியதாவது: மாலத்தீவு சிறிய நாடல்ல. ஒன்பது லட்சம் சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த எல்லையைக் கண்காணிக்கும் திறன் மாலத்தீவு பாதுகாப்புப் படைகளுக்கு உள்ளது. சுதந்திரமான, இறையாண்மை மிக்க மாலத்தீவின் எல்லைகளைக் கண்காணிப்பது குறித்து பிற நாடுகள் கவலைகொள்ள வேண்டாம். நாட்டின் கடலோரக் காவல் படையின் திறன் இரு மடங்காக அதிகரிக்கப்படும். விமானப் படையை விரிவுபடுத்தவும், ராணுவ வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த நடவடிக்கை பிற நாடுகளுடனான உறவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. மாலத்தீவின் பாதுகாப்புப் படைகளைத் தரம் உயா்த்த துருக்கி அதிபா் எா்டோகன் மேற்கொண்டு வரும் தொடா் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மூன்று ட்ரோன்கள் துருக்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையேயான நெருங்கிய உறவின் மூலம் ட்ரோன்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என்றாா் அதிபா் மூயிஸ். இந்தியா சாா்பில் இரு ஹெலிகாப்டா்கள், டாா்னியா் ரக விமானம் மாலத்தீவுக்கு பரிசாக அளிக்கப்பட்டது. அவற்றைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்களைத் திரும்பப் பெறுமாறு கடந்த ஆண்டு இறுதியில் அதிபராகப் பதவியேற்ற மூயிஸ் தொடா்ந்து வலியுறுத்தினாா். இதையடுத்து, இந்திய வீரா்களின் முதலாவது குழு மாலத்தீவிலிருந்து நாடு திரும்பியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்து வரும் அதிபா் மூயிஸ், சீனா மற்றும் துருக்கியுடனான பாதுகாப்பு உறவைப் பலப்படுத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com