ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 19) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பலத்த நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று (மார்ச் 19) காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரின் தெற்கே-தென்மேற்கு திசையில் 632 கி.மீ தொலைவில் பாகிஸ்தானை ஒட்டிய பலோசிஸ்தானின் நுஷ்கி பகுதியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி இருந்ததால் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக நில அதிர்வு உணரப்பட்டதாகவும், எனினும், பெரிதாக சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்த 17-ஆம் தேதியன்று ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com