ரஷியாவில் அப்பாவி மக்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலுக்கு காங். கண்டனம்!

ரஷியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
மாஸ்கோவில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் மக்கள்
மாஸ்கோவில் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தோருக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தும் மக்கள்படம் | ஏபி

ரஷியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நேற்றிரவு(மார்ச். 22) நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 60 பேர் பலியாகினர். மேலும் அங்கு வெடிகுண்டுகளையும் வீசிச் சென்றதால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

இந்த பயங்கரவாதத் தாக்குதலில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படும் சூழலில், இந்த கொடூரத் தாக்குதலில் 145க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த படுபயங்கர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்(ஐ.எஸ்.ஐ.எல்) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட உலகம் முழுவதும் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், ரஷியாவில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலை கண்டித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பதிவிட்டுள்ளதாவது, ”மாஸ்கோவில் அப்பாவி மக்கள் மீதான கொடூரத்தனமான பயங்கரவாதத் தாக்குதலை காங்கிரஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.”

”அமைதிக்கும் மனிதநேயத்தும் பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களுடன் துணை நிற்பதுடன், இச்சோகத் தருணத்தில், ரஷியாவுடன் தோளுக்குத் தோளாக நாங்கள் உறுதுணையாக நிற்கிறோம்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com