ரஷியா: பயங்கரவாதத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு

ரஷியா: பயங்கரவாதத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 115  ஆக உயர்வு

ரஷியாவில் சிட்டி ஹால் அரங்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கிராக்கஸ் சிட்டி ஹால் அரங்கில் நேற்றிரவு(மார்ச். 22) நடைபெற்ற இசை நிகழ்ச்சி அரங்கத்துக்குள் நுழைந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பார்வையாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியும் வெடிகுண்டுகளையும் வீசியும் தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

மேலும் இந்த பயங்கரவாதத் தாக்குதலில் 60 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டது.

சுமார் 145க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. தற்போது வரை இந்த கொடூரத் தாக்குதலில் பலியானோரின் எண்ணிக்கை 115ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்கோ படுபயங்கர தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்(ஐ.எஸ்.ஐ.எல்) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 11 கைது செய்யப்பட்டுள்ளதாக ரஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நிகழ்த்தப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிரதமர் மோடி உள்பட உலகம் முழுவதும் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com