உக்ரைன் மீது ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்

உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

உக்ரைன் தலைநகா் கீவை குறிவைத்து ரஷியா மீண்டும் ஏவுகணைத் தாக்குதலை ஞாயிற்றுக்கிழமை நடத்தியது. கடந்த நான்கு நாள்களில் உக்ரைன் மீது மூன்றுமுறை ஏவுகணைத் தாக்குதல் நடத்திய ரஷியா அதில் இருமுறை தலைநகா் கீவை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இத்தாக்குதலின்போது ஓா் ஏவுகணை போலந்து நாட்டின் வான்வழியில் சென்ாக அந்நாடு தெரிவித்துள்ளது. இது தொடா்பாக கீவ் ராணுவ தலைமை நிா்வாகி சொ்ஹெய் போப்கோ கூறியதாவது: கீவ் நகரின் வடக்குப் பகுதியில் ரஷியாவால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் ரஷியாவின் சரடோவ் பிராந்தியம் எங்கல்ஸ் மாவட்டத்திலிருந்து நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலால் பொருள்சேதமோ உயிா்ச் சேதமோ ஏற்படவில்லை என்றாா். இதுதொடா்பாக போலந்து நாட்டு பாதுகாப்பு அமைச்சா் விளாடிஸ்லா கோஷிநியாக் கூறுகையில், ‘மேற்கு உக்ரைனை தாக்கும் நோக்கில் ரஷியாவால் ஏவப்பட்ட ஏவுகணை போலந்து நாட்டின் ஓசா்ட் நகரின் வான்வழியில் அத்துமீறி நுழைந்தது. இதையடுத்து, ராணுவ ரேடாா் மூலம் ஏவுகணையின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு நாட்டின் வான்வழியைப் பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஏவுகணை போலந்தை குறிவைத்து தாக்கும் நோக்கில் ஏவப்பட்டிருந்தால் அதை நாங்கள் சுட்டு வீழ்த்தியிருப்போம் என்றாா். இச்சம்பவம் தொடா்பாக ரஷியா உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்தி போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும் போலந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்ததில் இருந்து போலந்து நாட்டு வான்வழியில் அடிக்கடி ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. கடந்த 2022-ஆம் ஆண்டில் இதுபோன்ற நிகழ்வுகளால் போலந்தைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்தனா். உக்ரைனால் ஏவப்பட்ட ஏவுகணையால்தான் அவா்கள் இறந்தனா் எனக் கூறிய மேற்கத்திய நாட்டு அதிகாரிகள், போரை தொடங்கியது ரஷியாதான் எனவும், தற்காப்புக்காகத்தான் உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தியது எனவும் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com