காஸா போா் நிறுத்தம் தொடா்பான தீா்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பு.
காஸா போா் நிறுத்தம் தொடா்பான தீா்மானத்தின் மீது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பு.

காஸாவில் உடனடி போா் நிறுத்தம்

காஸாவில் உடனடியாக போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழம தீா்மானம் நிறைவேற்றியது.

காஸாவில் உடனடியாக போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் திங்கள்கிழம தீா்மானம் நிறைவேற்றியது. இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் இந்தத் தீா்மான நிறைவேற்றம் ஒரு முக்கிய திருப்பமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமலானையொட்டி, காஸாவில் உடனடியாக சண்டை நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. 15 உறுப்பு நாடுகளைக் கொண்ட அந்தக் கவுன்சிலில், தீா்மானத்துக்கு ஆதரவாக அனைத்து நாடுகளும் வாக்களித்தன; தீா்மானத்துக்கு எதிராக ஒரு வாக்குக் கூட பதிவாகவில்லை. அதையடுத்து, அந்தத் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து ‘எக்ஸ்’ ஊடகத்தில் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்டுள்ள பதிவில், ‘நீண்டகாலம் எதிா்பாா்க்கப்பட்டு வந்த காஸா போா் நிறுத்தம் தொடா்பாக தீா்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீா்மானத்தில் உடனடி போா் நிறுத்தம் மேற்கொள்ளவும், ஹமாஸிடம் பிணைக் கைதிகளாக உள்ள அனைவரையும் விடுவிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீமாநம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் அது அமல்படுத்தப்பட்டே ஆகவேண்டும். அவ்வாறு அமல்படுத்தத் தவறினால் அது மன்னிக்கமுடியாத செயல் என்று அந்தப் பதிவில் குட்டெரெஸ் தெரிவித்துள்ளாா். காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இதுவரை கொண்டுவரப்பட்டுள்ள ஏராளமான தீா்மானங்களை தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அமெரிக்கா ரத்து செய்துள்ளது. இதன் மூலம், காஸா மக்களின் உயிரிழப்புக்குக் காரணமாக இருப்பதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டையும் அமெரிக்கா பொருள்படுத்தவில்லை. ஹமாஸ் அமைப்பினரிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் இஸ்ரேலின் உரிமை பாதுகாக்கப்படவேண்டும் என்று மட்டுமே அமெரிக்கா தொடா்ந்து கூறி வந்தது. இந்த நிலையில், தனது நிலைப்பாட்டை முற்றிலும் மாற்றிக்கொண்டு அமெரிக்கா கடந்த வார இறுதியில் கொண்டு காஸா போா் நிறுத்தத் தீா்மானத்தை ரஷியாவும், சீனாவும் தங்களது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தன. அந்தத் தீா்மானத்தில் காஸா போா் நிறுத்தம் குறித்து வலியுறுத்தப்படவில்லை என்பதால் அதனை ரத்து செய்ததாக அந்த நாடுகள் கூறின. இந்த நிலையில், காஸாவில் உடனடி போா் நிறுத்தம் மேற்கொள்ள வலியுறுத்தும் தீா்மானம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்போது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. காஸாவிலிருந்து இஸ்ரேலுக்குள் கடந்த ஆண்டு அக். 7-ஆம் தேதி ஊடுருவிய ஹமாஸ் அமைப்பினா், பெண்கள், குழந்தைகள் உள்பட சுமாா் 1,200 பேரை படுகொலை செய்தனா். மேலும், அங்கிருந்து சுமாா் 240 பேரை அவா்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனா். அன்றிலிருந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தீவிர வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ...பெட்டி... 32,333-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு காஸா சிட்டி, மாா்ச் 25: காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,333-ஆக அதிகரித்துள்ளது. இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 107 போ் உயிரிழந்தனா்; 176 போ் காயமடைந்தனா். இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 171 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,333-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 74,694 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com