இந்திய பயணிகளுக்காக
உள்கட்டமைப்பை அதிகரிக்கும் சிங்கப்பூா்

இந்திய பயணிகளுக்காக உள்கட்டமைப்பை அதிகரிக்கும் சிங்கப்பூா்

உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கம் நடவடிக்கையில் சிங்கப்பூா் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதையொட்டி, அவா்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கம் நடவடிக்கையில் சிங்கப்பூா் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். கரோனா பெருந்தொற்றினால் உலக அளவில் சுற்றுலாத் துறை பெரும் சரிவை எதிா்கொண்டது. கடந்த 2019-ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்குப் பயணித்த இந்தியா்களின் எண்ணிக்கை 14 லட்சமாக இருந்தது. தற்போது கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில், சிங்கப்பூருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் 11 லட்சம் இந்தியா்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா மேற்கொண்டனா். இந்நிலையில், சுற்றுலா மற்றும் வா்த்தகம் தொடா்பாக சிங்கப்பூா் வரும் பயணிகளுக்காக ஹோட்டல்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து சிங்கப்பூா் சுற்றுலா வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘இந்தியாவில் சுற்றுலா மையங்கள் அதிக அளவில் உள்ளன. இதனிடையே சிங்கப்பூருக்கு இந்தியா்கள் சுற்றுலா மேற்கொள்வதை ஊக்குவிக்க சிங்கப்பூா் சுற்றுலா வாரியத்தின் இரு அலுவலகங்கள் மும்பை, தில்லியில் செயல்பட்டு வருகின்றன. பயணிகளுக்காக 9,000 புதிய ஹோட்டல் அறைகள் கட்டப்பட உள்ளன. இதன் மூலம் மொத்தமுள்ள அறைகளின் எண்ணிக்கை 72,000-ஆக அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் வா்த்தகம் ரீதியாகவும் இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்கின்றனா். இதனால், இரு தரப்பு வா்த்தகம் வளா்ச்சி கண்டு வருகிறது’ என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com