ஃபிஜியில் நிலநடுக்கம்

ஃபிஜியில் நிலநடுக்கம்

ஃபிஜியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்எஸ்சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ஃபிஜியின் சுவா பகுதிக்கு 591 கி.மி. தென்மேற்கே புதன்கிழமை அதிகாலை 6.58 மணிக்கு (இந்திய நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.4 அலகுகளாகப் பதிவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com