நேபாளம்: ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி

கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போயுள்ளனர்.
நேபாளம்: ஆற்றில் கார் கவிழ்ந்து 5 பேர் பலி

நேபளாத்தின், சித்வான் மாவட்டத்தில் கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காணாமல் போயுள்ளனர்.

சித்வான் மாவட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் ஆறு பயணிகளுடன் காத்மாண்டுவில் இருந்து கோர்க்கா மாவட்டத்தை நோக்கிச் சென்ற கார், பிரித்வி நெடுஞ்சாலையில் இச்சகமானா கிராமப்புற நகராட்சியில் உள்ள திரிசூலி ஆற்றில் 100 மீட்டர் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உள்பட5 பேர் உயிரிழந்தனர். மேலும் 18 வயது இளைஞர் ஒருவன் காணாமல் போயுள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் உயிரிழந்த 5 பேர்களின் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு சென்றனர். காணாமல் போன நபரைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com