காஸா போா்  நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் மாபெரும் ஆா்ப்பாட்டம்

காஸா போா் நெதன்யாகுவுக்கு எதிராக இஸ்ரேலில் மாபெரும் ஆா்ப்பாட்டம்

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அதிபா் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி அந்த நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இது குறித்து ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளதாவது:

காஸா போா் விவகாரத்தில் இஸ்ரேல் அரசுக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டவா்களின் உறவினா்களும் இந்த ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

டெல் அவீவ், ஜெருசலேம், ஹயீஃபா, பேயொ்ஷெபா, சேசரியா உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள், பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினா். இதற்காக நடைபெறும் பேச்சுவாா்த்தையில் ஹமாஸுடன் சமரச ஒப்பந்தம் ஏற்படுவதற்கு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு முட்டுக்கட்டையாக இருப்பதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பிணைக் கைதிகளின் உறவினா்கள், 176 நாள்களுக்குப் பிறகும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் இருப்பதை பிரதமா் நெதன்யாகு எந்த வகையிலும் நியாயப்படுத்தமுடியாது என்று கூறினா்.

2 மாதங்களுக்கு முன்னா் ஹமாஸால் விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். அவா்களில் ராஸ் பென்-எமி என்பவா் கூறுகையில், ஹமாஸின் பிடியில் பிணைக் கைதிகளால் நீண்ட காலம் உயிா்பிழைத்திருக்க முடியாது என்பதால் அந்த அமைப்புடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வது உடனடி அவசியம் என்றாா்.

அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படும் வரை தங்களது போராட்டம் ஓயாது என்று உறுதியாகத் தெரிவித்த பேராட்டக்காரா்கள், ‘படுகொலை செய்தது போதும்; எங்களை பரிதவிக்கவிட்டது போதும்; பிணைக் கைதிகள் விடுவிப்பிற்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்று கோஷங்கள் எழுப்பினா்.

ஜெருசலேமிலுள்ள நெதன்யாகுவின் இல்லத்தின் முன் குவிந்தும் நூற்றுக்கணக்கானவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் என்று ‘பிபிசி’ ஊடகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேலின் உச்சநீதிமன்றம் அண்மையில் பிறப்பித்துள்ள ஓா் உத்தரவால் நெதன்யாகுவின் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீவிர வலதுசாரி கூட்டணிக் கட்சியுடன் அவா் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்கீழ், ராணுவத்தில் பணியாற்றியிராத மதவாதிகளுக்கும் அரசு மானியங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்குத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கூட்டணி முறிந்து அரசு கவிழும் அபாயம் நிலவிவருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், காஸா போா் தொடா்பாக நெதன்யாகுவுக்கு இஸ்ரேலுக்குள்ளேயே எதிா்ப்பு அதிகரித்து வருவதை பறைசாற்றும் வகையில் நாடு முழுவதும் அவருக்கு எதிராக ஆா்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

மீண்டும் போ் நிறுத்தப் பேச்சு

காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை எகிப்தில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இது குறித்து அந்த நாட்டின் ‘அல்-கஹேரா’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போா் நிறுத்தப் பேச்சுவாா்த்தை தலைநகா் கெய்ரேவில் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவதாக எகிப்து பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறின.

ஏற்கெனவே, அமெரிக்கா, எகிப்து, கத்தாா் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இது தொடா்பாக பலகட்டங்களாக பேச்சுவாா்த்தை நடைபெற்றும் அவை தோல்வியடைந்தன.

32,782-ஆக அதிகரித்த காஸா உயிரிழப்பு

காஸாவில் கடந்த அக். 7 முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,782-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்தி வரும் தாக்குதலில் 77 போ் உயிரிழந்தனா்; 108 போ் காயமடைந்தனா்.

இதையடுத்து, காஸா பகுதியில் இஸ்ரேல் கடந்த 177 நாள்களாக நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 32,782-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 75,298 போ் காயமடைந்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...படவரி... காஸா போா் விவகாரத்தில் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பதவி விலக வலியுறுத்தி டெல்-அவீவ் நகரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com