பாகிஸ்தான்: அரசு நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளங்களுக்குத் தடை

பாகிஸ்தான்: அரசு நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளங்களுக்குத் தடை

பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானில் அரசு நிகழ்ச்சிகளில் சிவப்புக் கம்பளங்களைப் பயன்படுத்துவதற்கு அந்த நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இது குறித்து அரசு வட்டரங்கள் கூறியதாவது:

அரசு நிகழ்ச்சிகளில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கும் நடைமுறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தத் தடையை பிரதமா் ஷாபஸ் ஷெரீஃப் பிறப்பித்துள்ளாா்.

வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை வரவேற்பதற்கு மட்டும் இந்தத் தடையிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானில், அரசின் செலவினங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த சிவப்புக் கம்பளத் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com