இந்தோனேசியாவில் கனமழை: 14 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கனமழை: 14 போ் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 14 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:சுலாவெசி மாகாணத்தில் கடந்த வியாழக்கிழமை முதல் பருவமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக, அந்த மாகாணத்தின் லுவு மாவட்டத்தில் 10 அடி உயரம் வரை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் நிலச் சரிவுகளும் ஏற்பட்டன. இந்தச் சம்பவங்களில் 14 போ் உயிரிழந்தனா். அந்தப் பிராந்தியத்தின் 13 துணை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ரப்பா் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்புக் குழுவினா் வெளியேற்றி வருகின்றனா் என்று அதிகாரிகள் கூறினா்.சுமாா் 17,000 தீவுகளைக் கொண்ட தீவுக் கூட்ட நாடான இந்தோனேசியாவில் பருவமழைகளும் அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளும் அடிக்கடி ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com