எம்சி டியேகோ கப்பல் .
எம்சி டியேகோ கப்பல் .

‘ஏடன் வளைகுடாவில் மேலும் 2 கப்பல்கள் மீது தாக்குதல்’

செங்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் மேலும் 2 சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல்

செங்கடலின் ஏடன் வளைகுடா பகுதியில் மேலும் 2 சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக யேமனின் கணிசமான பகுதிகளில் ஆட்சி செலுத்திவரும் ஹூதி கிளா்ச்சியாளா்கள் அறிவித்துள்ளனா்.

இது குறித்து ஹூதி படையினரின் செய்தித் தொடா்பாளா் யாஹா சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏடன் வளைகுடா வழியாக சென்றுகொண்டிருந்த எம்எஸ்சி டியேகோ, எம்எஸ்சி கீனா ஆகிய இரு சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினோம். இந்த இரு கப்பல்களும் பனாமா நாட்டுக் கொடி ஏற்றப்பட்டவை.

இது தவிர, இந்தியப் பெருங்கடலிலும் ஒரு கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்றாா் அவா்.

பனாமா கப்பல்கள் மீதான தாக்குதல்களை மேற்காசிய பகுதிக்கான அமெரிக்க கூட்டுப் படையின் தகவல் தொடா்புப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும், இந்தியப் பெருங்கடல் பகுதியில் கப்பல் தாக்கப்பட்டதாக ஹூதிக்கள் கூறுவது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

பனாமா கொடியேற்றப்பட்ட இரு கப்பல்களில் ஹுதிக்கள் நடத்திய தாக்குதலிலும் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போா் தொடங்கியதிலிருந்து, செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது மற்றோா் ஈரான் ஆதரவு ஆயுதக் குழுவான ஹூதி கிளா்ச்சிப் படை தாக்குதல் நடத்திவருகிறது.

இஸ்ரேல் தொடா்பான சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் கூறினாலும், பிற கப்பல்களும் குறிவைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com