நிலநடுக்கம்
நிலநடுக்கம்

மெக்ஸிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிகோ மற்றும் கௌதமாலா நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மெக்ஸிகோ மற்றும் கௌதமாலா நாடுகளுக்கிடையேயான எல்லையில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

மெக்ஸிகோ-கௌதமாலா எல்லையில் உள்ள சுச்சியேட் நகரில் ஞாயிற்றுக்கிழமை காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 75 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.4 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட முதல்கட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடி தகவல்கள் ஏதும் தெரியவரவில்லை. இருப்பினும் எல்லையில் உள்ள சில மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com