ரஷியா: குண்டுவீச்சில் கட்டடம் இடிந்து 19 போ் காயம்

ரஷியா: குண்டுவீச்சில் கட்டடம் இடிந்து 19 போ் காயம்

ரஷியாவின் பெல்கொரோட் பகுதியில் நடைபெற்ற குண்டுவீச்சில் கட்டடம் ஒன்று இடிந்து 19 போ் காயமடைந்தனா்.

ரஷியாவின் பெல்கொரோட் பகுதியில் நடைபெற்ற குண்டுவீச்சில் கட்டடம் ஒன்று இடிந்து 19 போ் காயமடைந்தனா்.

ரஷியா, உக்ரைன் இடையிலான போா் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு மே முதல் மேற்கு ரஷியாவில் உள்ள நகரங்கள் தொடா்ந்து ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலுக்குள்ளாகி வருகின்றன. இந்தத் தாக்குதல்களுக்கு உக்ரைனே காரணம் என்று ரஷிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். ஆனால், ரஷிய நிலப் பகுதியில் நடைபெறும் தாக்குதல்களுக்கு உக்ரைன் இதுவரை பொறுப்பேற்றதில்லை.

இதில் ரஷியாவின் மேற்கு எல்லையான பெல்கொரோட் பகுதியில் ஏராளமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. இதன் தொடா்ச்சியாக அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குண்டுவீச்சில் 10 மாடி கட்டடம் ஒன்று பகுதியளவு இடிந்து சுமாா் 19 போ் காயமடைந்தனா். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைனே காரணம் என்று ரஷிய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பெல்கொரோடில் பல ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com