சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா: ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்

சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம்.
சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம்.

டிபிலிசி, மே 14: தென் மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள முன்னாள் சேவியத் யூனியன் நாடான ஜார்ஜியாவில், "ரஷிய பாணி' மசோதா என்று விமர்சிக்கப்படும் சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.

அந்த நாட்டில் செயல்படும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் 20 சதவீதத்துக்கும் மேல் வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்றால், "வெளிநாட்டு சக்திகளின் நலன்களுக்காக இயங்கும் அமைப்பு' என்று தங்களைப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று அந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அண்டை நாடான ரஷியாவைப் போலவே, அரசுக்கு எதிரான கருத்துகளை நசுக்க முயல்வதாகவும் ஊடக சுதந்திரம் பறிக்கப்படுவதாகவும் ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிரெம்ளின் (ரஷிய அதிபர் மாளிகை) கொள்கைகளைப் பின்பற்றி இந்த சட்ட மசோதாவை ஜார்ஜியா அரசு உருவாக்கியுள்ளது' என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தீவிர போராட்டம் நடைபெற்றது. அமைதியான முறையில் அந்தப் போராட்டத்தை நடத்தியவர்கள் மீது போலீஸôர் தாக்குதல் நடத்தியதாக புகார்கள் எழுந்தன.

கடுமையான சர்ச்சைக்கு இடையிலும், வெளிநாட்டு செல்வாக்கு மசோதாவை நிறைவேற்றுவதில் பிரதமர் இராக்ளி கொபாகிட்úஸ உறுதியாக இருந்தார்.

ஜார்ஜியாவில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டைத் தடுக்கவும் ஊடகங்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதி செய்யவுமே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும், அதனை தனது "வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்துசெய்யப் போவதாக அதிபர் சலோமி ஸþரபிச்விலி எச்சரிக்கை விடுத்திருந்தாலும், அந்த நடவடிக்கையைப் புறக்கணிக்கத் தேவையான அளவுக்கு மசோதாவுக்கு ஆதரவான எம்.பி.க்களின் பலம் நாடாளுமன்றத்தில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், கடுமையான போராட்டங்களுக்கு இடையிலும் சர்ச்சைக்குரிய அந்த மசோதாவை நாடாளுமன்றம் செவ்வாய்க் கிழமை நிறைவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சர்ச்சைக்குரிய வெளிநாட்டு செல்வாக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com