உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை
படம் | ஏபி

உக்ரைனுக்கு விரைந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர்: ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் முக்கிய ஆலோசனை

உக்ரைன் அதிபருடன் அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆலோசனை நடத்தவுள்ளார். போலந்துக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவர், அங்கிருந்து ரயில் மூலம் அண்டை நாடான உக்ரைனுக்கு இன்று (மே. 14) காலை சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வித முன்னறிவிப்புமின்றி உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது, உக்ரைன் அரசுக்கு சற்று அதிர்ச்சியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு இன்று(மே. 14) காலை திடீர் பயணம் மேற்கொண்ட அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டு அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கியுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைனுடன் அமெரிக்க துணை நிற்கும் என்ற நிலைப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறவுள்ளார்.

கடந்த சில நாள்களாக, உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் ரஷிய படைகள் முன்னேறி தாக்குதல்களை அரங்கேற்றி வரும் சூழலில், உக்ரைனுக்கு அமெரிக்கா 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் அடங்கிய தொகுப்பை வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில், இந்த பயணம் அமைந்துள்ளது. அதில் உக்ரைன் ராணுவத்துக்கு தேவையான வான் பாதுகாப்பு ஏவுகணைகள் முக்கிய ஆயுதங்களாக உள்ளடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com