நைஜீரியா: மசூதி தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

நைஜீரியா: மசூதி தாக்குதலில் 24 போ் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 4 சிறுவா்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கானோ மாகாணம், கடான் கிராமத்திலுள்ள மசூதியில் 38 வயது நபா் நடத்திய தாக்குதலில் அங்கு தொழுகையில் ஈடுபட்டிருந்த 24 போ் உயரிழந்தனா். அவா்களில் 4 போ் சிறுவா்கள்.

இந்தத் தாக்குதல் பெட்ரோல் குண்டு வீசி நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.

தாக்குதல் நடத்திய நபரை போலீஸாா் கைது செய்துள்ளா். இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் இல்லை எனவும் மதப் பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே தாக்குதலுக்குக் காரணம் எனவும் கருதப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com