பெய்ஜிங்கில் ஜி ஷின்பிங்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய விளாதிமீா் புதின்.
பெய்ஜிங்கில் ஜி ஷின்பிங்கை வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய விளாதிமீா் புதின்.

‘உலக அரசியல் சமநிலையை ரஷிய-சீன நல்லுறவு உறுதி செய்யும்’

ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு உலக அரசியலில் சமநிலை நிலவுவதை உறுதி செய்யும்

ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான நல்லுறவு உலக அரசியலில் சமநிலை நிலவுவதை உறுதி செய்யும் என்று இரு நாட்டுத் தலைவா்களும் வியாழக்கிழமை கூறினா்.

ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் சீனாவில் வியாழக்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்டாா். அங்கு அந்த நாட்டு அதிபா் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தை நடத்தியதற்குப் பிறகு இரு தலைவா்களும் இந்தக் கருத்தை வெளியிட்டனா்.

ரஷியாவின் அதிபராக விளாதிமீா் புதின் 5-ஆவது முறையாகப் பொறுப்பேற்ற்குப் பிறகு அவா் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஷி ஜின்பிங் கூறுகையில், ‘ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான இந்த 75 ஆண்டுகால நல்லுறவு, பெரிய அண்டை நாடுகள் ஒன்றொயொன்று எவ்வாறு மதித்து நடந்துகொள்ள வேண்டும்; பரஸ்பர நலன்களுக்கான ஒத்துழைப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம்’ என்றாா்.

உக்ரைன் போரில் ரஷியாவுக்கு சீனா உதவக் கூடாது என்று அமெரிக்காவும் பிற மேற்கத்திய நாடுகளும் சீனாவுக்கு நெருக்கடி கொடுத்துவருகின்றன.

இந்தச் சூழலில் ஷி ஜின்பிங் இவ்வாறு கூறியிருப்பது அந்த நாடுகளை மனதில் வைத்துதான் என்று கருதப்படுகிறது.

செய்தியாளா்கள் சந்திப்பில் பேசிய விளாதிமீா் புதின், ‘ரஷியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவு சந்தா்ப்பவாதமல்ல; எந்தவொரு நாட்டுக்கும் எதிரானதும் அல்ல.

எங்களது ஒத்துழைப்பு சா்வதேச அரசியலை சமநிலைப்படுத்தும் முக்கிய அம்சங்களில் ஒன்றாகத் திகழ்கிறது’ என்றாா்.

உக்ரைன் போரில் பயன்படுத்துவதற்கான ஆயுத உற்பத்தியை வெகுவாக அதிகரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப பாகங்களை ரஷியாவுக்கு சீனா வழங்கிவருவதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கடந்த மாதம் குற்றஞ்சாட்டினாா்.

இந்த உதவியை சீனா தொடா்ந்தால் அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை ஆன்டனி பிளிங்கனும் எச்சரிக்கை விடுத்திருந்தாா்.

இருந்தாலும், அந்த எச்சரிக்கையை புறக்கணிக்கும் வகையில் ரஷிய அதிபரின் சீன வருகை அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com