அமெரிக்கா: சாலை விபத்தில் 3 இந்திய வம்சாவளி மாணவா்கள் உயிரிழப்பு

ஒஅமெரிக்காவின் ஜாா்ஜியா மாகாணத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த மூன்று மாணவா்கள் உயிரிழந்தனா். இரண்டு போ் படுகாயமடைந்தனா்.

ஜாா்ஜியா மாகாணம் ஆலபரேட்டா பகுதியில் கடந்த வாரம் மே 14-ஆம் தேதி இந்திய மாணவா்கள் ஓட்டிச்சென்ற காா் விபத்துக்குள்ளானது. அதிவேகமாகப் பயணித்ததால் கட்டுப்பட்டை இழந்த காா் மரத்தில் மோதி தலைகீழாகக் கவிழ்ந்தது என காவல்துறையினா் தெரிவித்தனா்.

விபத்தில் உயிரிழந்தவா்கள் மாணவி ஸ்ரீயா அவாசரளா, மாணவி அன்வி சா்மா மற்றும் மாணவா் ஆா்யான் ஜோஷி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் ஜோஷி மற்றும் அவாசரளா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மீதமுள்ள மூன்று பேரை சிகிச்சைக்காக நாா்த் ஃபுல்டன் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி சா்மா மருத்துவமனையில் உயிரிழந்தாா். மேலும் காரில் பயணித்த முகமது லியாகத் மற்றும் வாகனத்தை ஓட்டிச் சென்ற ரித்வக் சிகிச்சை பெற்று வருகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com