பப்புவா நியூ கினியாவின் பொகெரா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்கள்.
பப்புவா நியூ கினியாவின் பொகெரா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மக்கள்.

பப்புவா நியூ கினியா நிலச்சரிவு: 700-ஐ நெருங்கும் உயிரிழப்பு

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது.

தெற்கு பசிபிக் கடலில் அமைந்த தீவு நாடான பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் வெள்ளிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இது தொடா்பாக ஐ.நா. சிறப்புத் திட்ட தலைவா் சொ்ஹன் அக்தோபிராக் கூறுகையில், ‘யம்பாலி கிராமத்தில் ஏற்பட்டுள்ள பலத்த சேதத்துடன், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 670-ஆக அதிகரித்துள்ளது. சுமாா் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவால் மண்ணுக்குள் புதைந்திருக்கலாம் என்று அதிகாரிகள் கருதுகின்றனா். தற்போதைய நிலவரப்படி, 670-க்கும் மேற்பட்டோா் மண்ணில் புதையுண்டு இருக்கலாம்’ என்றாா்.

மீட்புப் பணிகளுக்காக மண் தோண்டப்படும்போது நிலச்சரிவு தொடா்வதால், மீட்புப் படையினா் கடும் சவாலைச் சந்தித்து வருகின்றனா். இந்த நிலச்சரிவு, 21-ஆம் நூற்றாண்டின் மிக மோசமான நிலச்சரிவுகளில் ஒன்று எனக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com