வட கொரியா: தென் கொரியாவுக்கு ‘குப்பை’ பலூன்கள்

வட கொரியா: தென் கொரியாவுக்கு ‘குப்பை’ பலூன்கள்

பிரம்மாண்ட பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் வட கொரியா குப்பைகளைக் கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரம்மாண்ட பலூன்கள் மூலம் தென் கொரியாவுக்குள் வட கொரியா குப்பைகளைக் கொட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது 2-ஆவது உளவு செயற்கைக்கோளை வட கொரியா திங்கள்கிழமை விண்ணில் செலுத்த முயன்றது. எனினும், அதை ஏந்திச் சென்ற ராக்கெட் சில நிமிஷங்களில் வெடித்துச் சிதறியது.

இந்த நிலையில், நூற்றுக்கணக்கான பலூன்களில் குப்பைகளைக் கட்டி அவற்றை தென் கொரியாவுக்குள் வட கொரியா புதன்கிழமை பறக்கவிட்டது. அவற்றில் வெடிபொருள்களோ, ரசாயன ஆயுதங்களோ இருக்கலாம் என்ற அச்சத்தின் பேரில் தென் கொரியா மீட்புக் குழுவினரை அனுப்பியது.

செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கு முன்னா் தென் கொரியா நடத்திய போா் விமானப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் வட கொரியா இந்த விநோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com